உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லலித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுமி 5-ஆம் வகுப்பு மாணவி. பிறவியில் இருந்தே சிறுமிக்கு காது கேட்காது. சம்பவம் நிகழ்ந்தநாளில், பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை 42 வயதுடைய நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்பகுதி மக்களால் காயமடைந்த சிறுமி மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் அடிப்படையில் 42 வயதான மனோஜ் ராய்க்வார் என்பவரை கைது செய்துள்ளனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் அந்த சிறுமியின் நிலைமை இதுவரை சீராகவில்லை. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.