கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உளிபண்டா கிராமத்தில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அக்ஷயா(17) என்ற சிறுவன் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுவன் தனது மாநிலத்தில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் காதல் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்து சிறுவன் தான் தங்கி இருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.