![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/12/n64184750417332895998325315eb7e99ec3097bd9414b6e11cc351c0080a5b03efb4d1c21ace44e5e885ad.jpg)
ஆக்ரா கான்ட் ரயில் நிலையத்தின் காத்திருப்பு அறையின் கழிவறையில் புதிதாகப் பிறந்த பிஞ்சு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜிஆர்பி குழுவினர், புதிதாகப் பிறந்த குழந்தை கழிவறையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து ரயில்வே மருத்துவ குழுவினர் குழந்தையை பரிசோதனை செய்ததில் உடல்நிலை மோசமாக இருந்ததால் எஸ் என் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.