கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 20-ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 5,102 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு இருந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது.
இந்நிலையில், கர்நாடக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. இதனையடுத்து, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேர்தல் அறிக்கையை பாஜக நாளை வெளியிடுகிறது. அதன்படி, முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கர்நாடகாவின் சிம்மாசனத்தை பிடிக்கும் போட்டியில் காங்கிரஸ் கட்சி அசுர பலத்துடன் களமிறங்கிறது.