போலி அழைப்புகள் மற்றும் SMS-களை தடுக்கும் விதமாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது(TRAI) விதிகளை மாற்ற முடிவுசெய்துள்ளது. புது விதிகளின் கீழ் TRAI ஒரு புதிய தொழில்நுட்பத்தை கொடுக்கவுள்ளது. இது இன்று  மே 1 ஆம் தேதி முதல் போன்களில் வரும் போலி அழைப்புகள் மற்றும் SMS-களை நிறுத்தும்.

அதன்பின் பயனர்கள் அறியப்படாத அழைப்புகள் மற்றும் செய்திகளில் இருந்து விடுபடுவார்கள். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI) தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அவர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்தி சேவைகளில் செயற்கை நுண்ணறிவு ஸ்பேம் பில்டர்ஸ்களை நிறுவ உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

போலி அழைப்புகள் மற்றும் செய்திகளில் இருந்து பயனர்களை பாதுகாப்பதற்கு இந்த பில்டர்கள் உதவும். இந்த புது விதியின் அடிப்படையில் ஃபோன் அழைப்புகள் மற்றும் செய்திகள் தொடர்பான அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மே 1, 2023-க்கு முன் பில்டர்களை நிறுவவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.