தமிழக முதல்வர் ஸ்டாலின் என்ற விருதுநகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விளாசினார். இது குறித்து அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை பார்க்கும்போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது. மக்கள் நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைக்காமல் பதவி சுகத்திற்காக கரப்பான் பூச்சியை போன்று ஊர்ந்து சென்ற உங்கள் பெயரையா வைக்க முடியும். தமிழ் இனத்திற்காக 80 வருடங்கள் ஓயாமல் உழைத்த கலைஞரின் பெயரை மக்கள் நலத்திட்டங்களுக்கு வைக்காமல் வேறு யாரு பெயரை வைப்பது. பதவி சுகத்திற்காக கரப்பான் பூச்சியை போன்று ஊர்ந்து சென்றீர்களே..? உங்கள் பெயரையா வைக்க முடியும்.
எதை பயனிலாத திட்டம் என்று சொல்கிறீர்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே.? வாய் துடுக்காகவும் ஆணவமாகவும் பேசி பேசி தான் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறீர்கள். உங்கள் ஆணவத்தாலேயே தமிழ்நாட்டு மக்கள் உங்களை தொடர்ந்து தோற்கடித்துக் கொண்டே இருப்பார்கள் என்று கூறினார். மேலும் முன்னதாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் கலைஞர் கருணாநிதி பெயரை வைப்பதை மட்டுமே முதல்வர் ஸ்டாலின் நோக்கமாக வைத்துள்ளதாகவும் கருணாநிதி பெயரை வைக்க விரும்பினால் உங்களுடைய அறக்கட்டளை சார்பில் அந்த பணிகளை மேற்கொள்ளுங்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.