பெரும்பாலான பொதுமக்கள் BSNL சேவையை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் பொதுமக்களுக்கு கம்மியான விலையில் நிலையான நெட்வொர்க் சேவையை இந்தியா முழுக்க தடை இல்லாமல் வழங்கி வரும் BSNL, தற்போது ரூபாய்.269 ப்ரீபெய்ட் திட்டத்தை அதன் சென்னை பயனாளர்களுக்காக வழங்கி வருகிறது. BSNL தமிழக வட்டார வாடிக்கையாளர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலையானது ரூபாய் 269 ஆக இருக்கும்.

BSNL ரூபாய்.269 ப்ரீபெய்ட் திட்டத்தில், தினமும் 2GP டேட்டாவை வழங்குகிறது. இத்திட்டம் 28 தினங்கள் வேலிடிட்டி, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் 100 நாட்கள் SMS சலுகைகளை அளிக்கிறது. மேலும் இத்திட்டத்தில் BSNL ட்யூன்களும் கிடைக்கும். மேலும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், சேலஞ்சஸ் அரீனா, லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீசஸ், ஹார்டி மொபைல் கேம் சர்வீஸ், லோக்துன் மற்றும் ஜிங் ஆகிய பல்வேறு சலுகைகள் இவற்றில் கிடைக்கிறது.