உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தனது பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் தொடர்ந்து தினந்தோறும் புதுவித அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் பயணங்களை கவரும் வகையில் பல புதுப்புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு வாட்ஸ் அப் multiple chat வசதியை நீக்கியது. தற்போது டெக்ஸ்டாப் பயனர்களுக்கு மீண்டும் இந்த வசதி கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் பல பேருக்கு மெசேஜ் அனுப்ப முடியும். இந்த வசதி அடுத்த காலத்தில் டெக்ஸ்டாப் பயனர்களுக்கு நீக்கப்பட்டாலும் மொபைல் பயனர்களுக்கு தக்கவைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வசதி select chat என்ற பெயரில் வர உள்ளதாக கூறப்படுகிறது.