உலக அளவில் பிரபலமான செயலியாக இருக்கும் வாட்ஸ் அப்பில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது Multiple Chat வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி வலைதளம் (Desktop) மூலம் வாட்ஸ் அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் நாம் ஒரே நேரத்தில் பல நபர்களுடன் சேட் செய்யலாம். ஒருவேளை தேவையில்லை என்றால் ஒரே நேரத்தில் அனைத்து சேட் பாக்ஸ்களையும் மூடிவிடலாம். அதன் பிறகு chat Menu என்ற ஆப்ஷனுக்குள் சென்றால் செலக்ட் சேட் என்ற ஆப்ஷன் இருக்கும்.

இதில் நாம் mark, mute, Read, unread போன்ற ஆப்ஷன்களை பயன்படுத்தலாம். அதன் பிறகு நம்முடைய வாட்ஸ் அப்பில் ஏதாவது ஆபத்தான ஸ்டேட்டஸ் வைக்கப்பட்டிருந்தால் அது தொடர்பாக நம்மால் புகார் தெரிவிக்க முடியும். ஏற்கனவே ஆபத்தான மெசேஜ் மற்றும் பயனர்கள் குறித்து புகார் தெரிவிக்கும் வசதி இருக்கும் நிலையில், தற்போது புதிதாக ஆபத்தான ஸ்டேட்டஸ் குறித்து புகார் தெரிவிக்கும் வசதியும் கூடுதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட delete for me என்று ஆப்ஷனில் மெசேஜ்களை திரும்பப்பெறும்‌ undo ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இதே ஆப்ஷன் Desktop பயனர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.