அப்பா, கோமாளி, PS ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை வினோதினி நேற்று கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக  இருக்கும் இவர், சில மாதங்களுக்கு முன்பாக ஜிஎஸ்டி-க்கு எதிராக வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவானது இணையத்தில் வைரலான நிலையில் தொடர்ந்து அரசியல் குறித்து பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் தான் நேற்று  மநீம கட்சியில் இணைந்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை   தெரிவித்து வருகின்றனர்.