கத்தி இல்லாமல் பிரேத பரிசோதனை செய்யக்கூடிய தொழில்நுட்பத்தை மருத்துவ உலகம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய முறையில் வழக்கமான CT, MRI ஸ்கேனிங் போன்றே பிரேத உடல் பைகளில் சுற்றப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

அனைத்து கோணங்களிலும் ஸ்கேன் செய்யப்பட்டு அவற்றின் அடிப்படையில் தசைகள், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகளில் காயங்கள் அடையாளம் காணப்படும். இந்த வகை பிரேத பரிசோதனை உட்புற ரத்தப்போக்கு, உறுப்பு குறைபாடுகள், அசாதாரண காயங்கள் மற்றும் கண்ணால் பார்க்க முடியாத நுட்பமான குறைகளையும் கண்டறிய உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.