உத்தர் பிரதேஷ் மாநிலம் குஷிநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது தத்து மகளை கடுமையாக தாக்கிய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் சிறுமி தனது தாயின் எதிரே வந்து அமர்ந்தார்.

சிறிது நேரத்திலேயே அந்த பெண் சிறுமியின் கையை வளைத்து கையில் இருந்த பொருளால் சரா மாறியாக தாக்கியுள்ளார். அதோடு சிறுமியின் தலைமுடியைப் பிடித்து தரையில் இழுத்து போட்டு தாக்கியுள்ளார்.

இதில் சிறுமியின் கதறல் காணொளியில் அப்பட்டமாக கேட்க பார்ப்பவர்கள் மனதை பதறச் செய்துள்ளது. இந்த காணொளி வைரலான நிலையில் அந்தப் பெண் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.