ஆந்திர முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அமித்ஷா தமிழிசையை அழைத்து கண்டித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  இதை பார்த்த இணையவாசிகள் பலரும் நிர்மலா சீதாராமனை அமித்ஷா இதுபோல் மேடையில் வைத்து கண்டிக்க முடியுமா?

அவருக்கு ஒரு நியாயம் தமிழிசைக்கும் ஒரு நியாயமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் பெண்களுக்கும் மரியாதை கொடுக்க தெரியாத கட்சியில் இருக்கவே கூடாது எனவும் தமிழிசை பாஜகவில் இருந்து விலகுமாறும் கூறி வருகிறார்கள்.