தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை மீனா. இவரின் கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். அதனால் அவரின் இழப்பிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கும் மீனாவை அவரின் தோழிகள் ஓரளவு பழைய நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். இவரின் ஒரே மகளான நைனிகா நான்கு வயதில் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மீனா கணவர் மரணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் தன்னுடைய செல்ல மகளின் பிறந்தநாளை மீனா உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். தற்போது முதல் முறையாக கணவர் இல்லாமல் மகளுக்கு மிகக் கோலாகலமாக கப்பலில் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அது தொடர்பான ஒரு வீடியோவை அவர் பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.