கயல் சீரியலில் இருந்து ஹீரோ விலகியதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்து வருகின்றது. இந்த சீரியலில் சஞ்சீவ், சைத்ரா ரெட்டி என பலர் நடித்து வருகின்றார்கள். இதனுடைய டிஆர்பி ரேட்டிங்கை மற்ற சேனல்களின் சீரியல்கள் முந்த முடியாமல் தவித்து வருகின்றது.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடி கொண்டிருக்கும் கயல் சீரியலில் ஹீரோவாக சஞ்சீவி நடிக்கின்றார். இந்த நிலையில் அவர் விலகி இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சஞ்சீவ் தனது இன்ஸ்டாவில் அந்த பதிவை பகிர்ந்து ரசிகர்களின் கருத்தை கேட்டிருக்கின்றார்.