சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பவன் கோயல்(30). இவர் குஜராத் மாநிலத்தில் இருக்கும் சுற்றுலா இடமான கட்ச் பகுதி ஹோட்டலில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு பிரேசிலை சேர்ந்த ரோஸி நைட் ஷிகேரா(51) என்ற பெண் சுற்றுலா வந்த போது பவன் கோயலுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் ஓராண்டாக காதலித்து வந்தனர். அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி கணவர் 32 வயதுடைய மகன் இருக்கின்றனர். அவர்களை விட்டுவிட்டு ரோஸி பவன் கோயிலை திருமணம் செய்ய உள்ளார்.

இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம். இருப்பினும் காதலித்து வருகின்றனர். தற்போது டெல்லியில் குடியேறிய நிலையில் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். ரோசி இந்தியாவிலேயே குடியேற இருப்பதால் அதற்கான விண்ணப்பம் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. கணவர், மகன் இருக்க தன்னைவிட வயது குறைவான இந்தியரை பெண் திருமணம் செய்ய உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.