சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் ஆலப்பாக்கம் பாரதிதாசன் நகரில் சட்ட விரோதமாக பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வாடகைக்கு வீடு எடுத்து ஒரு பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்தது உறுதியானது.
இந்த சம்பவம் தொடர்பாக விஜயகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தீபா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.