தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதத்தின் போது பல கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு விளையாட்டு சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் 26 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், 15 கோடியில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தப்படும். 3000 திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்