உலக புகழ்பெற்ற கோடீஸ்வரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் போன்றே முகத்தோற்றம் கொண்ட சீனாவைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் தற்போது சமூக வலைதளங்களில் உலகளவில் பேசப்படும் நபராக மாறியுள்ளார். சீனாவின் ஷான்சி மாகாணம் தொங்சுவான் பகுதியில் யாிலான் என்ற பார்சுப் உணவகத்தை நடத்தி வரும் 48 வயதான மா ஜியான்பிங் என்பவர்தான் அந்த இணையப் பிரபலம். எலான் மஸ்கின் முகம், சிகையலங்காரம் மற்றும் உடல் அசைவுகள் பலவும் இவரிடம் சிறப்பாகப் பொருந்திப்போவது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக எலக்ட்ரீசியனாக வேலை பார்த்த மா ஜியான்பிங், பின்னர் உணவுத் துறைக்கு வந்து தனது நண்பருடன் இணைந்து இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். சீன சமூக வலைதளப் பக்கமான டோயினில் இவர் வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை வழங்கும் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோ குறைந்த நேரத்தில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைக் குவித்து இணையத்தில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் அப்பகுதியில் அமைதியாக நடந்து வந்த இவரது கடை, தற்போது சுற்றுலாத் தலம் போல மாறிவிட்டதுடன், இவரைக் காணவே பலரும் குவிகின்றனர்.
The Chinese Elon lookalikes are getting out of hand 😂
BBQ shop owner Ma Jianping has EXPLODED on Chinese socials for bearing a (passing) resemblance to the Technoking of Tesla.
I suppose we all have doppelgängers somewhere, on this planet of 8.3 billion…
Writer: Michael…
— Mario Nawfal (@MarioNawfal) July 30, 2026
இந்த இணையப் புகழ் காரணமாக மா ஜியான்பிங்கின் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்தது. பலரும் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதுடன், அவருடன் கை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இவரை எலான் மஸ்க் போல சித்தரித்து ஏஐ புகைப்படங்கள் மற்றும் மீம்ஸ்களை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர். ஆப்பிள் மற்றும் என்விடியா நிறுவனங்களின் தலைவர்களுடன் இவர் பார்சுப் சுடுவது போன்ற நகைச்சுவையான கற்பனைப் படங்களும் இணையத்தில் வலம் வருகின்றன.
இரவோடு இரவாகக் கிடைத்த இந்த இன்டர்நெட் புகழால் பல வணிக வாய்ப்புகளும், ஆன்லைன் பிரபலமாகும் வாய்ப்புகளும் இவரைத் தேடி வந்தன. இருப்பினும், இந்த திடீர் விளம்பரம் தனக்குச் கூச்சத்தையும் பதற்றத்தையும் தருவதாகக் கூறும் இவர், அந்த வாய்ப்புகள் அனைத்தையும் உடனடியாக மறுத்துவிட்டார். ஆன்லைன் இன்ஃப்ளுய்சராக மாறுவதைவிட, காலை 9 மணி முதல் நள்ளிரவு தாண்டி தனது கடையில் வாடிக்கையாளர்களுக்குச் சுவையான உணவு பரிமாறுவதே தனக்கு மனநிறைவைத் தருவதாகத் தெரிவித்துள்ளார்.
