மத்திய அரசு நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற நடைமுறையை கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது. இது குறித்து ஆய்வு செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் தேசிய சட்ட ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது. அந்த வகையில் பொதுமக்கள், அரசியல் கட்சியினரிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்கிறது. அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ள சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி இதற்கு பதில் அளித்துள்ளார். அதாவது “ஒரே நாடு ஒரே தேர்தல்” முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் பா.ஜ.க கூட்டணியில் உள்ள அ.தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை ஜனவரி 16-ஆம் தேதிக்குள் தெரிவிக்க சட்ட ஆணையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.