அடுத்த வாரம் செப்டம்பர் 28ஆம் தேதி மிலாது நபி, அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி செய்தியை முன்னிட்டு இரண்டு நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் செப்டம்பர் 29ஆம் தேதி மட்டும் நீங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டால் உங்களுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். எனவே வெளியூர் செல்ல திட்டமிட்டு உள்ளவர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது இல்லையென்றால் கடைசி நேரத்தில் பேருந்தில் டிக்கெட் கிடைக்காமல் போகலாம்.