கிரேக்க நாட்டில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகின்றது. அங்கு தினமும் ஒருவர் பிறந்தால் இரண்டு பேர் உயிர் இழக்கின்றனர். 2011 ஆம் ஆண்டில் 1.14 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 1.07 கோடியாக உள்ளது. 2050 ஆம் ஆண்டில் அங்கு மக்கள் தொகை 90 லட்சமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை பெற்றுக் கொள்ள அரசு பல சலுகைகளை அளித்தாலும் அந்த நாட்டு இளைஞர்கள் திருமணத்தில் ஆர்வமின்றி இருக்கின்றனர்.