ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் சுமேர் மற்றும் சோஹேன் சிங். இவர்களுக்கு வயது 26. இவர்கள் இருவரும் இரட்டையர்களாக இருப்பினும் தொழிலுக்காக வெவ்வேறு மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். அதன்படி சுமேர் குஜராத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், சோஹன் ஜெய்பூரில் ஆசிரியர் தகுதி தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். இதில் சுமேர் கடந்த 11-ஆம் தேதி வீட்டில் உள்ளவர்களிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட சோஹன் கடந்த 12-ஆம் தேதி வீட்டிற்கு சென்ற நிலையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். ஒரே நாளில் பிறந்த இரட்டை சகோதரர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இருவரது உடல்களுக்கும் ஒன்றாக இறுதி சடங்குகள் நடந்து முடிந்தது. மேலும் சோஹன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.