கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் கோரமண்டலம் விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டதில் பலரும் சிக்கி இருப்பதால் இதுவரை பலி எண்ணிக்கை 207 ஆக உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுப்பகுதியில் ஏற்பட்ட இந்த ரயில் விபத்தில் ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜனா தெரிவித்துள்ளார். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கியவர்கள் குறித்து விவரம் அறிய கட்டுப்பாட்டுஅறை  உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ரயில் விபத்து காரணமாக கோவா மற்றும் மும்பை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.இன்று காலை பிரதமர் மோடி இந்த ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்க இருந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் 207 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.