திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அப்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் வாகனங்களில் வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் இது தொடர்பாக அறங்காவலர் குழு தலைவர் சுபா ரெட்டி நேற்று மலைப்பாதையில் ஆய்வு செய்தார். அதன் பிறகு பேசிய அவர், பக்தர்களின் பாதுகாப்பிற்காக தேவஸ்தானம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஒவ்வொரு வாகனத்தையும் நன்றாக ஆய்வு செய்ய அதிநவீன இயந்திரங்கள் அமைப்பது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அழைப்பினை சோதனை சாவடியில் வாகனங்களின் பிட்னஸ் சரிபார்த்த பின்னரே மலை பாதையில் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வாகனத்தில் இன்சுரன்ஸ், பிரேக் மற்றும் எஸ்கலேட்டர் உள்ளிட்ட முழு தகுதி இருப்பை மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் எனவும் வண்டியை ஓட்டுபவரும் முழு உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.