ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்ததாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பலியான 288 பேரில் இதுவரை 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 288ல் இருந்து 275 ஆக உயிரிழப்புகள் கூறப்பட்ட நிலையில், மீண்டும் 288 என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரயில்வே விபத்தில் உயிரிழந்த 83 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை எனவும் அரசு அறிவித்துள்ளது.