தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மும்பையில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 1120 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தாமரைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.