தஞ்சாவூரில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் ஒரு வீட்டின் கட்டுமான பணி நடந்து வந்துள்ளது. இதற்காக அங்கிருந்த பழைய வீட்டை இடிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர். அதாவது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் குமார் ஆகிய இருவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் சடலங்களையும் பொதுமக்கள் உதவியோடு மீட்டனர். அதன் பிறகு பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.