மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் ஒரு ஹவுசிங் சொசைட்டி உள்ளது. இங்குள்ள மல்டி லெவல் பார்க்கிங் வளாகத்தில் இருந்து ஒரு கார் சுவரை உடைத்துக் கொண்டு கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அந்த கட்டிடத்தில் உள்ள மல்டி லெவல் பார்க்கிங்கில் இருந்து ஓட்டுநர் காரை வெளியே எடுக்கும்போது எதிர்பாராத விதமாக தவறுதலாக ரிவர்ஸ் கியரை அமுக்கிவிட்டார். இதனால் கார் பின்பக்கமாக சுவரை இடித்துக் கொண்டு கீழே விழுந்தது. இதில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.