மத்தியபிரதேசம் மாநிலத்தில் ஒரு விவசாயி தங்கள் நிலத்தில் உள்ள கிணற்றை காணும் என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். ஒரு படத்தில் வடிவேலு என்னோட கிணறு இங்கதான் இருந்துச்சு. ஆனா இப்ப வந்து பார்த்தா காணல என்று காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார். அதேபோன்று தற்போது ஒரு சம்பவம் நிஜத்தில் அரங்கேறி உள்ளது. அதாவது புர்கான்பூர் மாவட்டத்தில் உள்ள காகர்லா பகுதியில் தேவ்தாஸ் ரத்தோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்துவரும் நிலையில் கடந்த 6 மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தன் கிணற்றை காணவில்லை என்று கூறி புகார் கொடுக்க வருகிறார். இந்த நிலையில் அவர் தன் குடும்பத்தினரை அழைத்து வந்து பேப்பரை தரையில் விரித்து வைத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்த நிலையில் அதனை கேட்டதும் அவரே ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டார். இ
து தொடர்பாக அந்த விவசாயிடம் கேட்டபோது அவருக்கு ஆறு ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அவருடைய மாமா இந்த நிலத்தில் ஒரு பகுதி தனக்கு சொந்தமானது என்று கூறி விற்பனை செய்து விட்டதால் தற்போது கிணறு இல்லை. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் தான் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறும்போது, உண்மையில் அவருடைய கிணறு காணாமல் போகவில்லை. ஆணவத்தை எழுதிய எழுத்தாளர் மது போதையில் தவறாக எழுதிவிட்டார். மற்றபடி அவருக்கு சொந்தமான கிணறு அவருடைய நிலத்தில் தான் உள்ளது. இதை சம்பந்தப்பட்டவருக்கு நாங்கள் புரிய வைத்துள்ளோம். மேலும் ஆணவத்தில் ஏற்பட்ட குளறுபடியால் தான் இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுத்தார்.