2023 ஆம் வருடத்தில் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புது ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் 30 நாட்களுக்கான புதிய பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.

இதில் ஏர்டெல்லில் ரூ.319 பிளானில், தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதனையடுத்து ரூ.296 பிளானில் 30 நாட்களுக்கு 25 ஜிபி வழங்கப்படுகிறது. ரூ.199 பிளானில் டேட்டா கிடையாது. எனினும் அழைப்பு செய்தி மட்டும் உண்டு. அதன்பின் ஜியோவின் ரூ.259 பிளானில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.296 பிளானில் 30 நாட்களுக்கு 25 ஜிபி வழங்கப்படும். விஐ-யில் ரூ.319 பிளானில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். ரூ.337 பிளானில் 30 நாட்களுக்கு 28 ஜிபி வழங்கப்படுகிறது .