பொது வருங்கால வைப்புநிதியில் (PPF) பணத்தைச் சேமிப்பது என்பது நீண்ட கால மற்றும் ஆபத்து இல்லாத முதலீட்டு வழிகளில் ஒன்றாகும். எனினும் PPF கணக்கு 15 வருடங்கள் நிறைவடைந்ததும் முதிர்ச்சியடைகிறது. PPF இப்போது தன் முதலீட்டாளர்களுக்கு 7.1% வட்டியை தருகிறது. பொது வருங்கால வைப்புநிதி விதிமுறைகளின் அடிப்படையில், ஒரு சந்தாதாரர் ஒன்றுக்கு அதிகமான கணக்குகளை வைத்திருக்க இயலாது.

எஸ்பிஐ PPF கணக்கை ஆன்லைல் மூலம் திறப்பதற்குரிய வழிமுறைகள் குறித்து நாம் தற்போது தெரிந்துகொள்வோம். முதலில் உங்கள் எஸ்பிஐ ஆன்லைன் கணக்கை திறக்க வேண்டும். கோரிக்கை மற்றும் விசாரணைகள் எனும் டேப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது புது PPF கணக்குகள் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும். இதையடுத்து புது பிபிஎஃப் கணக்கு என்ற பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். அங்கு உங்களது பான் எண் கட்டப்படும்.

நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கைத் திறக்க விரும்பும் உங்களது வங்கிக் கிளையின் விபரங்களை வழங்க வேண்டும். முகவரி மற்றும் நாமினேஷன் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை நீங்கள் சரிபார்க்கவும். சரிபார்ப்பு முடிந்தவுடன் தொடர என்பதைக் கிளிக் செய்யவும். பின் உங்களது படிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது என்ற செய்தியுடன் டயலாக் பாக்ஸ் காட்டப்படும். தொடர்ந்து ஆதார் எண் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தை நீங்கள் டவுன்லோடு செய்யவும். “பிபிஎஃப் ஆன்லைன் விண்ணப்பத்தை அச்சிடு” என்பதை தேர்ந்தெடுத்து படிவத்தை அச்சிடவும்.  படிவம் மற்றும் புகைப்படங்களுடன் 30 நாட்களுக்குள் வங்கிக்கிளைக்குச் போக வேண்டும்