சென்னை அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா அல்லது நடப்பு சீசனோடு ஓய்வு பெறுவாரா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் எம்.எஸ் தோனி ஓய்வு பெறுவாரா இல்லையா என்பது குறித்து அவர்தான் முடிவெடுக்க சென்னை அணியின் துணைப் பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, தோனியின் எதிர்காலத்தை பற்றி யாராலும் யூகிக்க முடியாது.

அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். கிரிக்கெட் மற்றும் வாழ்க்கையை புரிதலின் அடிப்படையில் அவர் ஒரு நம்ப முடியாத அற்புதமான வீரர். பல ஆண்டுகளாக அவர் நன்றாக விளையாடி வருகிறார். எனவே நன்றாக விளையாடி வரும் அவர் ஒரு நல்ல முடிவை எடுப்பார். அவர் எங்களுடைய வீரர்களுக்கு நிறைய தகவல் மற்றும் அறிவை பகிர்ந்து உதவுகிறார். மேலும் எம்.எஸ் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும் என்று கூறியுள்ளார்.