மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தனது உறவினரான பாஜக தலைவர் ஷிவ்சந்திர தைடே மீது புகார் கொடுப்பதற்காக தனது மகன் மற்றும் மருமகனுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாஜக தலைவர் அந்தப் பெண்ணை அடித்து உதைத்ததோடு கடுமையாக பேசியுள்ளார். அதை அந்தப் பெண் செல்போனில் பதிவு செய்ய முயற்சித்தார்.
அப்போது ஆத்திரமடைந்த பாஜக தலைவர் அந்த பெண்ணிடம் இருந்த செல்போனை பிடுங்கி அவரை அறைந்தார். அதனால் அந்தப் பெண்ணின் மகன் அவரை காப்பாற்ற முயன்ற போது, ஷிவ்சந்திர தைடே அவரையும் அடித்துள்ளார். இந்த சம்பவம் காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சியை சிவசேனா எம்எல்ஏ சுஷ்மா அந்தரே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
हीच का लाडली बहीण योजना ?? pic.twitter.com/71kvlS5lAI
— Adv. Yashomati Thakur (@AdvYashomatiINC) August 5, 2024
“>