நாம் தமிழர் தொண்டர்கள் நியாயமாக சீமான் மீது கோபப்பட வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, நாம் தமிழர் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை. சின்னத்தை பெற முறையாக விண்ணப்பித்திருக்க வேண்டும். நாம் தமிழர் அவ்வாறு விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பிக்க கூடாது? என்று நான் தடுக்கவில்லை. ஆனால் சம்பந்தமே இல்லாமல் சீமான் என் மீது பழி சுமத்துகிறார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.