பிரபல நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் லவ்யப்பா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் வெளியான லவ் டுடே படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் அமீர் கான் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

அதில் “மொபைல் போன்களால் நம் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது என்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை குஷி கபூரை பார்த்தபோது ஸ்ரீதேவியை பார்த்ததாக உணர்ந்தேன். இந்த படம் வெற்றி பெற்றால் நான் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு விடுவேன்” என கூறியுள்ளார்.