வாழ்க்கை சில நேரங்களில் ஒரு சில நொடிகளில் தன் ஒட்டுமொத்தக் கொடூரத்தையும் காட்டத் துடிக்கிறது. அப்படித்தான், சுற்றியும் வாகனங்கள் அசுர வேகத்தில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கும் அந்தப் பரபரப்பான சாலையில், யாருடைய கவனக்குறைவாளோ ஒரு பச்சிளம் குழந்தை தத்தித் தத்தி நடந்துகொண்டிருக்கிறது.
அந்தப் பிஞ்சு உயிருக்குத் தெரியவில்லை, இன்னும் சில மீட்டர் தொலைவில் ஒரு லாரி தன்னை நோக்கி எமனாக வந்து கொண்டிருக்கிறது. அந்தச் சாலையைக் கடக்கும் எவருக்கும், ஏன் அந்த வீடியோவைப் பார்க்கும் நமக்கே கூட “ஐயோ.. எல்லாம் முடிந்துவிட்டது, இதயம் படபடவென்று நின்றுவிடும் போல” என்ற மரண பயம் தோற்றுவிக்கிறது.
லாரியின் பிரேக்சத்தம் காதைக் கிழிக்கும் முன்பே, அந்தக் குழந்தை அந்த இரும்புச் சக்கரங்களுக்குள் நசுங்கிப் போகப்போகும் அந்த இறுதி நொடி… ஒரு நிமிடம் ஒட்டுமொத்த உறைந்து நிற்கிறது. ஆனால், விதி அங்கு ஒரு மனிதக் கடவுளை அனுப்பி வைத்திருந்தது. கையில் ஒரு டெலிவரி பார்சலைச் சுமந்து கொண்டு, தன் அன்றாடப் பிழைப்பிற்காக ஓடிக் கொண்டிருந்த அந்த சகோதரனின் கண்கள் அந்தக் குழந்தையைப் பார்க்கின்றன.
அங்கே யோசிக்க நேரமில்லை, ஒரு நொடித் தாமதம் கூட அந்தக் குழந்தையின் உயிரைப் பறித்துவிடும். தன் குடும்பம், தன் எதிர்காலம், தன் சொந்த உயிர் என அனைத்தையும் அந்த ஒரே நொடியில்மறந்து, பாயும் சிறுத்தையைப் போல அந்த அசுர வேக லாரியின் முன்னால் பாய்கிறார் அந்த டெலிவரி பாய். அந்தச் சகோதரனின் அசாத்தியமான, அதிவேகமான எதிர்வினை மட்டும் அங்கு நிகழாமல் போயிருந்தால், இன்று இந்தச் செய்தி முற்றிலும் வேறொரு கொடூரமான கதையாக மாறியிருக்கும்.
🚨 Xem đến giây cuối mà tim mình như ngừng đập…
Chiếc xe tải chỉ cách em bé vài mét.
Nếu không có phản xạ cực nhanh của anh shipper, có lẽ đã là một câu chuyện hoàn toàn khác.
Một khoảnh khắc…
Một quyết định…
Có thể cứu cả một mạng người. ❤️ pic.twitter.com/g513RoFdtp
— Pham Toi (@phamtoi678) July 11, 2026
“>
தன் உயிரைப் பணயம் வைத்து, எமனின் கைகளில் இருந்து அந்தப் பிஞ்சு உயிரைப் பறித்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டர்.
