மும்பையின் போரிவலி ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு இளைஞன் ரயில் நிலைய நடைமேடையில் படுத்துக்கொண்டு, இளம்பெண் ஒருவரின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மன்றாடும் காட்சி பதிவாகியுள்ளது.
அந்தப் பெண் அங்கிருந்து நகர முயன்றும், அவர் விடாமல் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறுகிறார். இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்தபடி ஏராளமான பயணிகள் அங்குக் கூடியுள்ளனர். பின்னர், ரயில்வே காவல்துறையினர் அந்த இடத்திற்கு வந்து, இருவரையும் சூழந்து நின்று விசாரிப்பதுடன், கூடியிருந்த கூட்டத்தைக் கலைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.
இந்த வீடியோவில் ‘உண்மையான காதல்’ என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்தச் சம்பவத்திற்கான உண்மையான பின்னணி என்ன என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
💔रूठकर ट्रेन पकड़ने जा रहे प्यार के पैरों में गिरा प्रेमी, दृश्य देखकर मौके पर पहुंची पुलिस 💔
यह वीडियो महाराष्ट्र मुम्बई के बोरीवली रेलवे स्टेशन का बताया जा रहा है जो सोशल मीडिया में वायरल है। pic.twitter.com/Lv0aCpTB8q
— Abhimanyu Singh (@Abhimanyu1305) July 11, 2026
“>
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது; ஒரு தரப்பினர் இதை ‘காதலின் வெளிப்பாடு’ என்று குறிப்பிட்டாலும், பலரும் பொது இடத்தில் இத்தகைய நாடகத்தனமான செயல்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ரயில்வே நிர்வாகமோ அல்லது மும்பை காவல்துறையோ இதுவரை இந்தச் சம்பவம் குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதால், இது தொடர்பான குழப்பமும் விவாதமும் இணையத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
