தமிழ்நாடு BJP கட்சியில் இருந்து காயத்ரி ரகுராம் விடுவிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டதாக காயத்ரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 மாதங்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து காயத்ரி நிரந்தரமாக நீங்க விரும்பியதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘என் தொழிலை கெடுத்ததற்கு நன்றி. என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி. என்னை மான பங்கம் செய்ததற்கு நன்றி. என் இளமையை பறித்ததற்கு நன்றி. எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி. கடவுள் உங்களை பார்த்துக் கொள்வார்” என்று உருக்கமாக எழுதியுள்ளார்.