தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைதன்யா மற்றும் பிரபல நடிகை சமந்தா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடிகர் நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதா துலிபாலாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் கொண்டா சுரேகா சமந்தா நாக சைதன்யா விவகாரம் குறித்து பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் சமந்த ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதாவது சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் விவாகரத்துக்கு கே.டி ராமராவ் தான் காரணம் என்று அவர் கூறினார்.
இந்நிலையில் நடிகை சமந்தா என்னுடைய விவாகரத்து பரஸ்பர சம்பந்தத்துடன் இணக்கமாக நடந்தது எனவும் இதில் அரசியல் தலையீடு செய்யாதீர்கள் எனவும், அரசியல் சண்டையில் என்னை இழுக்காதீர்கள் எனவும் பதிலடி கொடுத்துள்ளார். அதோடு அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் என்னுடைய விவாகரத்து என்பது தனிப்பட்ட விஷயம் என்பதால் அதைப் பற்றி ஊடகங்களில் பேச வேண்டாம் என சமந்தா வலியுறுத்தியுள்ளார்.