திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஒருவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது பலாத்காரம் ஆகாது என ஒரிசா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஒரு பெண்ணுடன் அவர் உடல் ரீதியாக நெருங்கி பழகியதாக வழக்கு தொடரப்பட்டது.

அதுமட்டுமின்றி குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க கீழமை நீதிமன்றத்துக்கு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நிபந்தனையின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீனில் இருப்பவர், விசாரணைக்கு ஒத்துழைப்பார் எனவும் பாதிக்கப்பட்டவரை அச்சுறுத்த மாட்டார் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.