இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் நிக் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 39 வயதாகிறது. மூன்று மனைவிகளுடன் வாழ்ந்து வரும் இவர் தன்னை ஒரு “டிராபிக் கணவர்” என கூறுவது வழக்கம். அதற்கு காரணம் என்னவென்றால் மூன்று மனைவிகளுக்கும் அவர் பரிசு போன்றவர் என்பதுதான். நிக்கின் மூன்று மனைவிகளும் வேலைக்கு செல்கின்றனர். ஆனால் நிக் வேலை இல்லாமல் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு நிக் தன்னுடைய முதல் மனைவியான ஏப்ரலை ஒரு பல்கலைக்கழகத்தில் வைத்து சந்தித்துள்ளார். அதன்பின் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து இரண்டாவது மனைவியான ஜெனிபரை 9 வருடங்களுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது மனைவியான டேனியலும் அவரின் வாழ்க்கைக்குள் நுழைகின்றார். நான்கு பேரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். நீங்கள் ஏன் வேலைக்கு செல்லவில்லை என்ற கேள்விக்கு நிக் கூறிய காரணம் என்னவென்றால் “அனைத்து அதிகாரமும் ராணியிடம் தான் உள்ளது. அதனால் எனது அனைத்து அதிகாரங்களையும் அவர்களிடமே நான் வழங்கி விட்டேன். மேலும் எனக்கு மூன்று மனைவிகளுடனும் தூங்குவது மிகவும் பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.