மறைந்த நடிகர் விஜயகாந்த் தன்னுடன் நடிக்க மறுத்ததாக ஊர்வசி சமீபத்தில் நேர்காணலில் கூறியுள்ளார். அவரை தங்கச்சி என சொல்லி பழகி விட்டேன், அவருடன் நடிக்க முடியாதுப்பா என்று விஜயகாந்த் கூறுவார். லவ் சீனில் என்னை உற்றுப் பார்த்து பேசும் காட்சிகளில் அதிகம் நடிக்க மாட்டார். இதனாலையே அவருடன் குறைந்த அளவிலான படங்களிலேயே நடித்துள்ளேன். ஆனால் மற்றவர்களுக்கு அவர் சாப்பாடு போடும் விஷயத்தை மறக்கவே முடியாது என்று ஊர்வசி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.