உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகரை தரிசிக்க சிறப்பு தரிசனமாக ரூபாய் 1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏற்கனவே பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசனம் ஆமலில் உள்ள நிலையில் நவம்பர் 2 ஆம் தேதி தொடங்க உள்ள கந்த சஷ்டி திருவிழாவை ஒட்டி விரைவு சிறப்பு தரிசனத்திற்கு 1000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.