பெங்களூரில் உள்ள புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர்கள் பால்ராஜ் – நாகலட்சுமி தம்பதி. இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் தீரஜ் என்ற மகன் இருந்தான். பால்ராஜ் Swiggy-யில் உணவுகளை டெலிவரி செய்யும் பணி செய்து வந்தார். இந்நிலையில் கஸ்டமர் கேக் ஒன்றை ஆர்டர் செய்துவிட்டு பின்னர் cancel செய்ததால் பால்ராஜ் அந்த கேக்கை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
பின்னர் தனது மகனுக்கும் கொடுத்து கணவன் மனைவி என மூவரும் கேக்கை ருசித்து சாப்பிட்டுள்ளனர். ஆனால் கேக் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மூவருக்கும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஐந்து வயது சிறுவன் தீரஜ் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பால்ராஜ் மற்றும் அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.