
பெங்களூரில் ஒரு இளம்பெண் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்தார். இவரும் உறவினரான பிரவீன் சிங் என்பவரும் ஆறு ஆண்டுகளாக நெருக்கமாக பழகி காதலித்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இந்த நிலையில் பிரவீன் சிங் அந்த புகைப்படங்களையும் வீடியோவையும் பெண்ணின் குடும்பத்தினரிடம் காட்டி விடுவதாக அவரை மிரட்டி உள்ளார். மேலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். பலமுறை பிரவீன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கிடையே அந்த பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த பிரவீன் பெண்ணை மிரட்டி தனியார் விடுதிக்கு பார்க்க வருமாறு கூறியுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த பெண் தான் கொண்டு சென்ற பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீன் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.