மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை மார்செலா அல்சாகர். இவர் உடலை சுத்தம் செய்யும் மருந்து என நினைத்து தவளை விஷத்தை குடித்துள்ளார். இவர் இறை நம்பிக்கையில் அதிக நம்பிக்கை கொண்டவராக இருந்த நிலையில் ஹீலிங் எனப்படும் ஒரு வினோத திருவிழாவில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது உடலை சுத்தம் செய்வதற்காக இவர் தவளை விஷத்தை குடித்துள்ளார். அதாவது உடலை சுத்தம் செய்யும் மருந்து என நினைத்து தவளை விஷத்தை அவர் குடித்த நிலையில் துடி துடித்து உயிரிழந்தார். இவர் குடித்தது ராட்சச இலை தவளை என்று அழைக்கப்படும் அமேசானிய தவளை விஷம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த நடிகை தவளை விஷத்தை குடித்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.