வங்காள தேசத்தில் இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்து கோவில்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து பேரணி ஒன்றில் அவர் வங்கதேசத்துக்கு கொடியை அவமதித்து விட்டதாக கைது செய்யப்பட்டார். இதில் இந்துக்களின் வீடுகள் மற்றும் கோவில்கள் சூறையாடப்பட்டு வந்தது இதில் பலர் காயம் அடைந்தனர்.
ஷேக் ஹசீனாவின் அரசு கவர்ந்த பிறகு, வங்காளதேசத்தில் இந்து சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதிகரித்து உள்ளதாக ராதாராமன் தாஸ் தெரிவித்துள்ளார். இதனால் இந்துக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. இந்நிலையில் அவர்களின் பாதுகாப்பிற்காக ராதாராமன் தாஸ் கூறியதாவது, பொது இடங்களில் காவி நிற ஆடைகளை அணிய வேண்டாம். குங்குமத்திலகம் இட வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதற்கு பதிலாக தங்கள் வீடுகளில் அல்லது கோவில்களில் கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.