அயர்லாந்திலுள்ள Co Wexford என்னும் இடத்தில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் தங்கள் வீட்டு மாடியிலுள்ள ஒரு அறையில் அந்த சிறுமி தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இரவு 11.45 மணி அளவில் கீழே ஏதோ பயங்கர சத்தம் கேட்பதால் சிறுமி கீழே வந்துள்ளார். அப்போது தன் தாயை ஒருவர் கத்தியால் குத்துவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவத்தில் சிறுமியின் தந்தைக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சிறுமிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் 3 மீட்டு பேரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமியின் தாய் உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.