புளோரிடாவில் பிரபல இசைக்கலைஞர் பிரின்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மிட்நைட் பிரண்ட்ஸ் என்ற யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர். இவரது மாமா பிலிப் கடந்த 1996 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது எலும்புக்கூடு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டடு ஆய்வுக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் கல்வி நோக்கத்திற்காக எலும்புகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது.

அதனால் அவர் அந்த எலும்புக்கூட்டை மீண்டும் அமெரிக்காவுக்கு கொண்டு சென்றார். அதன் பின் இதை வைத்து ஒரு கிட்டாரை வடிவமைக்க திட்டமிட்டார். அதன்படி தனது நண்பர்களின் உதவியோடு வடிவமைத்தார். அதாவது உலோக கம்பி ஒன்றை எலும்புக்கூட்டின் முதுகெலும்பு பகுதியுடன் இணைத்து கிட்டாரை வடிவமைத்தார். இந்த கிட்டார் தனது மாமாவின் இனிய நினைவாக இருக்கும் என்று பிரின்ஸ் கூறுகிறார்.